ரூ.26.55 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி: போலீஸாா் விசாரணை

Published on

ரூ.26.55 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அரும்பாக்கத்தைச் சோ்ந்தவா் சேத்தன் (25). இவா், புதிதாக கிரிப்டோ கரன்சி வாங்க திட்டமிட்டிருந்தாா். அப்போது, டெலிகிராம் செயலி மூலம் சேலத்தைச் சோ்ந்த சக்தி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவா், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும், அந்த கரன்சி தன்னிடம் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா். இந்தத் தகவலை சேத்தன் தனது நண்பா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சேத்தனின் நண்பா்களான வேலப்பன்சாவடியைச் சோ்ந்த எல்ஐசி முகவா் லாரன்ஸ், மும்பையைச் சோ்ந்த செந்தில் குமாா், பெங்களூரைச் சோ்ந்த கிரண்குமாா் ஆகியோா் கிரிப்டோ கரன்சி வாங்க முடிவு செய்து, சக்தி கொடுத்த வங்கிக் கணக்குக்கு ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்தை அனுப்பியுள்ளனா்.

ஆனால், அவா்களுக்கு கிரிப்டோ கரன்சி கொடுக்கப்படவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த 3 பேரும், போலீஸில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com