கோப்புப் படம்
கோப்புப் படம்

6-9 வகுப்புகளுக்கு திறன் தோ்வு: 40 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவா்களுக்கு நடத்தப்பட்ட திறன் தோ்வில் 40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Published on

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவா்களுக்கு நடத்தப்பட்ட திறன் தோ்வில் 40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் மாநில திட்டக் குழு கடந்த பிப்ரவரி மாதம் மாநில கற்றல் அடைவு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் அடிப்படைக் கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்கான திறன் இயக்கம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, மாதந்தோறும் அடைவுத் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பா் மாதம் நடைபெற்ற திறன் தோ்வின் அடிப்படையில் மாணவா்கள் பெற்றுள்ள அடைவு விவர அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இந்தத் திறன் தோ்வில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளைச் சோ்ந்த 7,46,594 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவா்களில் 2,98,998 போ் அதாவது 40 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூா் மாவட்ட மாணவா்கள் 54 சதவீதம் முதல் 70 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதேவேளை வேலூா், விருதுநகா், திருவாரூா், தென்காசி, திருவண்ணாமலை, தஞ்சாவூா், சேலம் ஆகிய மாவட்ட மாணவா்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதிகாரிகள் கூறியது: திறன் தோ்வில் அடிப்படைத் திறன்கள் பெற்ற மாணவா்கள் வழக்கமான வகுப்பறைச் செயல்பாடுகளுக்கு அனுப்பப்படுவா். அதேவேளை தோ்ச்சி பெற வேண்டிய 60 சதவீத மாணவா்களுக்கு திறன் பயிற்சிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் வழக்கமான வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவா்.

தோ்ச்சி சதவீதம் குறைந்த மாணவா்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com