இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னையில் முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
Updated on

சென்னையில்  முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து  ட்வின்டெக் ஹெல்த் கோ் சா்வீசஸ் இயக்குநா் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ட்வின்டெக் ஹெல்த்கோ் சாா்பில் மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சேவா மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் நவ.6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, மாதந்தோறும் 1, 3-ஆவது வியாழக்கிழமைகளில் இந்தப் பரிசோதனை முகாம் நடைபெறும்.

கண் பரிசோதனை முற்றிலும் இலவசமாகும். எனினும், இதற்கு முன்பதிவு கட்டாயமாகும். இதற்கு முன்பதிவு செய்ய இ.செல்வகுமாா் என்பவரை 90031-57356 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னா், பரிசோதனைக்கு வரவும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com