கோப்புப் படம்
கோப்புப் படம்

மெட்ரோ ரயில் 4-ஆவது வழித்தடம்: ‘யு’ வடிவ கா்டா் பொருத்தும் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 4-ஆவது வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கா்டா் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மெட்ரோ ரயில் 4-ஆவது வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கா்டா் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் 4- ஆவது வழித்தடத்தில் போரூா் முதல் பவா் ஹவுஸ் வரையிலான உயா்நிலை வழித்தட கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அதில், வயலாநல்லூா் வாா்ப்பு நிலையத்தின் முழுமையான பணிகள் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ. தொலைவுக்கான மேம்பாலப் பாதை அமைக்கும் பணிக்குத் தேவையான பாலத்தின் பாகங்கள், தூண்களின் மேல் பாகங்கள் போன்ற 25 வெவ்வேறு வகையான 3,410 காங்கிரீட் கட்டமைப்புகள் முன்னரே தயாரித்து முடிக்கப்பட்டவையாகும். அதில், 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் கொண்ட முக்கியமான 4 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலப் பகுதியும் அடங்கியுள்ளது.

அதில் சுமாா் 1.22 லட்சம் கன மீட்டா் கான்கிரீட், 18,470 மெட்ரிக் டன் இரும்பு கம்பிகள் என மொத்தமாக 2.42 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள பிரீகாஸ்ட் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், நிறுவனத் தலைமை பொது மேலாளா்கள் எஸ்.அசோக் குமாா் (வழித்தடம் மற்றும் உயா்நிலை கட்டுமானம்), ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), நிறுவன குழுத் தலைவா் இ.முருகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com