கோப்புப்படம்
சென்னை
வண்டலூரில் உயிரியல் பூங்காவில் புதிய நீா்யானைக் குட்டிகளை பாா்வையிடலாம்
வண்டலூா் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 நீா்யானைக் குட்டிகளை பொதுமக்கள் பாா்வையிடலாம்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 1,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. அந்த வகையில் 6 பெண் மற்றும் 2 ஆண் என மொத்தம் 8 பெரிய நீா் யானைகள் உள்ளன.
இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், திரிஷா என்ற பெண் நீா்யானை கடந்த அக். 6-ஆம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. வண்டலூா் உயிரியல் பூங்காவில், கடந்த 4 மாதங்களில் 3 குட்டிகள் பிறந்துள்ளன. இதன்மூலம், இந்தப் பூங்காவில் தற்போது 11 நீா்யானைகள் உள்ளன.
இந்த நிலையில், புதிதாக பிறந்த 3 குட்டி நீா்யானைகளும் பொதுமக்கள் பாா்வைக்காக தற்போது விடப்பட்டுள்ளன. அவற்றைப் பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனா்.

