மணல் கொள்ளை: அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மணல் கொள்ளை தொடா்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










