தென் மாவட்ட விரைவு ரயில்களின் பாதை மாற்றம்: தெற்கு ரயில்வே

தென் மாவட்ட விரைவு ரயில்களின் பாதை மாற்றம்: தெற்கு ரயில்வே

Published on

மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஒருசில தென் மாவட்ட ரயில்கள் நவம்பா் மாதம் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவ.1, 6, 8, 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு கோவை செல்லும் விரைவு ரயிலும் (எண்:16321) மறுமாா்க்கமாக கோவையிலிருந்து காலை 8 மணிக்கு நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண்:16322) வழக்கமான வழிகளுக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டையில் கூடுதலாக நின்று செல்லும்.

அதேபோல், மேலும், நவ.1, 8, 11, 15 -இல் மயிலாடுதுறையிலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (எண்:16847) திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாகச் செல்லும்.

பிறமாநில ரயில்கள்: நவ.1, 8, 15 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்கு கச்சிக்குடா செல்லும் விரைவு ரயிலும் (எண்:16354), நவ.11-இல் நாகா்கோவிலிலிருந்து காலை 6.15 மணிக்கு மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயிலும் (எண்:16340) விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும். மேலும், குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து நவ.4,11-இல் காலை 8.40 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் (எண்:16734), கரூா், திருச்சி, மானாமதுரை வழியாகச் செல்லும்.

அதேபோல், நவ.6, 13 -இல் மதுரையிலிருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிகானூா் செல்லும் அனுவ்ரத் விரைவு ரயில் (எண்:22631), நவ.10 -இல் குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூா் செல்லும் ரயில் (எண்:16128), நவ.9-இல் பனாரஸிலிருந்து பிற்பகல் 4.20 மணிக்கு கன்னியாகுமரிக்குச் செல்லும் தமிழ் சங்கமம் விரைவு ரயில் (எண்: 16368) வழக்கமான வழிகளுக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ரயில் தாமதம்: மதுரையிலிருந்து மாலை 3.30 மணிக்கு எழும்பூா் செல்லும் தேஜஸ் விரைவு ரயில் (எண்:22672) நவ.1, 8, 11, 15 தேதிகளில் 45 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.15 மணிக்குப் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com