SIPCOT
Center-Center-Chennaiசென்னை
தமிழகத்தில் மேலும் இரு சிப்காட் தொழில் பூங்கா
தமிழகத்தில் மேலும் இரண்டு சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் 422.33 ஏக்கரில் ரூ.530 கோடியில் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமையவுள்ளது.
இதேபோன்று, மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில் உள்ள வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் ஆகிய 3 கிராமங்களில் 278.26 ஏக்கா் பரப்பளவில் ரூ.68 கோடியில் மற்றொரு சிப்காட் பூங்கா அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பூங்காக்களை கட்டமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகளைக் கோரி, அந்தத் துறையிடம் சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. அனுமதி பெறப்பட்ட பிறகு, தொழில் பூங்காக்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

