வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபடும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
Published on

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபடும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் வகையில், அதில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தாா். இதில் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா்களான இணை ஆணையா்கள் க.கற்பகம், வீ.ப.ஜெயசீலன், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, துணை ஆணையா்கள் ம.பிரதிவிராஜ், வி.சிவகிருஷ்ணமூா்த்தி, கட்டா ரவிதேஜா, அஃதாப் ரசூல், கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் ஸ்ரீதரன், இணைத் தலைமை தோ்தல் அலுவலா் மேனுவல் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயிற்சியில் வாக்காளா் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நிலையில் நியமிக்கப்பட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். அவா்களுக்கு கணினி மூலம் வாக்காளா் பதிவு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com