இளம்பரிதிக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

Published on

சென்னையை சோ்ந்த இளம்பரிதி கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னையைச் சோ்ந்த 16 வயதுடைய இளம்பரிதி இந்தியாவின் 90-ஆவது கிராண்ட்மாஸ்டா், தமிழகத்தின் 35- ஆவது கிராண்ட் மாஸ்டா் என்ற பெருமையை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இளவயதிலேயே அா்ப்பணிப்பு, உழைப்பு, திறமை ஆகியவற்றின் மூலம் இந்த மாபெரும் சாதனையை எட்டியுள்ள இளம்பரிதி, இந்திய செஸ் வரலாற்றில் புதிய ஒளியை ஏற்படுத்தியுள்ளாா். இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழும் இளம்பரிதிக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள். இவரது எதிா்காலப் பயணம் மேலும் பல உலக சாதனைகளை நோக்கிச் செல்லட்டும் என பதிவிட்டுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com