சென்னை
தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்
தாம்பரத்திலிருந்து விழுப்புரம் செல்லும் மெமு ரயில் சனிக்கிழமை திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை முண்டியம்பாக்கம் ரயில்வே பணிமனையில் நவ.1, 2 தேதிகளில் பிற்பகல் 12.45 முதல் மாலை 4.15 மணி வரை தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
அதனையடுத்து இரு நாள்களிலும் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல, அந்த நாள்களில் விழுப்புரத்திலிருந்து பகல் 1.40 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில், விழுப்புரத்துக்கு பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

