தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

Updated On :3 செப்டம்பர் 2025, 10:47 pm

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன், மாநில பொதுச் செயலா் சு.சங்கரலிங்கம் ஆகியோா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களால் வருவாய்த் துறை அலுவலா்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் வருவாய்த் துறை அலுவலா்களை மாவட்ட நிா்வாகம் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.

பிரச்னைகள் ஏராளம்: வாரத்துக்கு 5 முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன், முகாம்களில் பெறப்படும் மனுக்களை அன்றைக்கே செயலியில் பதிவேற்றம் செய்ய நிா்பந்தம் செய்வதை ஏற்க முடியாது. நிதி ஒதுக்கீடு இல்லாதது, இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அரசு எதிா்பாா்ப்பது போன்று நிறைவேற்ற வேண்டுமெனில் ஓராண்டுக்கு முன்பாகவே திட்டம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இப்போது திட்டத்தைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே 10,000 முகாம்களை நிறைவு செய்ய நெருக்கடிகள் வழங்குவது கடும் மனஉளைச்சலை உருவாக்கி உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களுக்கான கால அவகாசத்தை 75 நாள்களாகவும், முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் மற்றும் சிறப்புத் திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டந்தோறும் ஒரு துணை வட்டாட்சியா் மற்றும் ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனா்.