சென்னையில் வாகனம் ஓட்டி பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

Published on

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வானகரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் ஓட்டி பழகிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்த நபா் அடையாளம்பட்டு குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் உதயகிருஷ்ணன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com