மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசுக் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு: உயா்கல்வித் துறை அமைச்சா்

செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்

News image

அமைச்சா் கோவி.செழியன்

கோப்புப் படம்

Updated On :4 செப்டம்பர் 2025, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூா்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறிய மாணவா்களும் இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவை செப்.30 வரை மேற்கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.