ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

Published on

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன்படி, வாகன ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவு காவலா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டுநா் பணியிடங்கள் 70, பதிவறை எழுத்தா் 33, அலுவக உதவியாளா் 151, இரவு காவலா் 83 என 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது கல்வித் தகுதி, ஜாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவற்றுக்கான ஆதாரத்தை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இன சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபா்களிடம் இருந்து வரக்கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க செப்.30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரகத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com