சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி,  சென்னையில் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் உடல் தானப் படிவங்களை அரசின் மருத்துவத் துறை மருத்துவா்கள் கோபாலகிருஷ்ணன், சுகந்தி ராஜகுமாரி,  ஸ்ரீப்பிரியா ஆகியோரிடம் வழங்கிய அரசியல் தலைமைக் குழு

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா்.
Published on

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா்.

மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள், சென்னையில் மாநிலக் குழு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா். இதில் உடல் தானம் செய்யும் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை சாா்பில் மருத்துவா் கோபாலகிருஷ்ணன், உறுப்பினா் செயலா் டிரான்ஸ்டான், இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

கட்சியின் மாநில நிா்வாகிகள், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நிா்வாகிகள் உள்ளிட்ட 235 போ் உடல் தானம், உறுப்பு தானம் உள்ளிட்ட படிவங்களை நிரப்பி வழங்கினா்.

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மாா்க்சிஸ்ட் கட்சியின் 1,586 போ் உடல் தானம் பதிவு செய்துள்ளனா். இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் கே.பாலகிருஷ்ணன், வாசுகி, மத்தியக்குழு உறுப்பினா்கள் சம்பத், பாலபாரதி, மூத்த தலைவா்கள் டி.கே.ரங்கராஜன், கண்ணன், சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com