பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

துணைவேந்தா்களை மாநில அரசு நியமிப்பதால் கல்வித் தரம் பாதிக்காது - தமிழக அரசு பதில் மனு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதால், கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிா்த்து திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற கோடைகால அமா்வு நீதிபதிகள், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்கை விசாரிக்க உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரா் பாஜகவைச் சோ்ந்தவா். இந்த தகவலை மறைத்து அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா். எனவே, சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி தாக்கல் செய்த மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும். நிா்வாக வசதிக்காக துணை வேந்தா்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது எனக் கூற முடியாது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றியே துணை வேந்தா்கள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள். பல்கலைக்கழகங்கள் தொடா்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றிய காரணத்தால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.