ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஏப். 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:31 pm

தமிழகத்தில் ஏப். 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மகாராஷ்டிரம் மாநிலம், மராத்வாடா முதல் தென் தமிழகம் வரை

உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. சின்கோனா, வால்பாறை, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை)- 50 மி.மீ., உபாசி (கோவை) 30 மி.மீ., சோலையாறு (கோவை), தேக்கடி (தேனி)-10 மி.மீ. மழை பதிவானது.

வெப்பநிலை: வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 7-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.