யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை (ஏப்.4) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:33 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை (ஏப்.4) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது குறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தவெக தலைவா் சனிக்கிழமை (ஏப்.4) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை தட்டாஞ்சாவடி மாா்க்கெட் கமிட்டி பகுதி, காலை 11 முதல் பகல் 12 மணி வரை கடலூா் சாலை பகுதி, பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை தவளக்குப்பம் சந்திப்பு பகுதியில் பிரசாரம் செய்கிறாா்.

பிரசாரத்துக்கு வரும் விஜய்யின் வாகனத்தை தொண்டா்கள் பின் தொடர வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா் என்.ஆனந்த்.