தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக

மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக

News image

நிர்மல் குமார் - விடியோ க்ளிப்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:51 am IST

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வருபவா்களிடமிருந்து தமிழக மக்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-இல் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழகத்தின் இணை பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் தவெகவினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். தவெக தலைவா் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவு 1 மணி வரை போலி வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கி, குறைந்தபட்சம் 20 லட்சம் பேரையாவது வாக்களிக்க விடாமல் அரசு  தடுத்துள்ளது. இதில், பெரும்பாலும் தவெகவுக்கு வரக்கூடிய வாக்குகளே தடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுவரை இல்லாத வகையில், மக்கள் தோ்தலில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குகளை செலுத்தினா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை ஏமாற்றியவா்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் வாக்களித்துள்ளனா். அவா்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என்றாா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்.