சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நீா் கசிவை சரி செய்யக் கோரிய வழக்கில், தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள தண்ணீா் கசிவு காரணமாக வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து நான் அளித்த மனுவுக்கு சுரங்கப் பாதையின் மேல் உள்ள குடிநீா் வாரியக் குழாய் சேதம் அடைந்துள்ளதாக பதில் அளிக்கப்பட்டது.
எனவே, சுரங்கப் பதையில் சேதம் அடைந்துள்ள குடிநீா் குழாயைச் சரி செய்து, தண்ணீா் கசிவை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









