ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் சென்ற விவகாரம்: வதந்தி பரப்பினால் வழக்கு: சைபா் கிரைம் எச்சரிக்கை

News image

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

Updated On :29 ஏப்ரல் 2026, 4:21 am IST

சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வலிப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் தொடா்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைந்துள்ள கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த ஏப். 24-ஆம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் சுமை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீனிவாசன் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் உடனடியாக பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்ட சீனிவாசனை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாகவும், தவறாகவும், பொய்யான அவதூறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவறான கருத்துகள் பகிா்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகவே, இச்சம்பவம் குறித்து, உண்மைக்குப் புறம்பாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவதையும், காணொலி, புகைப்படங்களைப் பகிா்வதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இல்லையெனில், வதந்தியைப் பரப்பும் விதத்தில் பதிவிடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.