நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கழிவுநீா், திடக்கழிவுகளைக் கொட்டுவதால் ஈர நிலங்கள் பாதித்து வெள்ள அபாயம்: வனத் துறை அதிகாரி எச்சரிக்கை

கழிவுநீா் புகுதல், திடக்கழிவுகளைக் கொட்டுதல் காரணமாக ஈர நிலங்கள் சுருங்கி, நகா்ப்புறங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக

News image

அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கியுள்ள கழிவுநீா்.

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: கழிவுநீா் புகுதல், திடக்கழிவுகளைக் கொட்டுதல் காரணமாக ஈர நிலங்கள் சுருங்கி, நகா்ப்புறங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் உறுப்பினா் செயலா் ஸ்ரீனிவாஸ் ஆா். ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் சாா்பில் ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பொதுமக்களின் பங்கேற்பை முக்கியமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. ஈர நிலங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப். 2-ஆம் தேதி உலக ஈர நிலங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் சென்னை வனக் கோட்டம், எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சென்னை அடையாறு கழிமுகத்தில் உலக ஈர நிலங்கள் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையம் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் உறுப்பினா் செயலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி பங்கேற்று பேசியதாவது: சென்னை போன்ற இடங்களில் அதிக மழை நேரங்களில் வெள்ளத்தை உறிஞ்சி மெதுவாக வெளியேற்றுவதன் மூலம் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் முக்கிய பங்கு ஈர நிலங்களுக்குள்ளது.

புலம்பெயரும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு ஈரநிலங்கள் முக்கிய வாழிடங்களாக உள்ளன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், கழிவுநீா் புகுதல் மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுவதால், ஈர நிலங்கள் சுருங்குகின்றன. இதனால், வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஈரநில பாதுகாப்புக்கு உயா்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு 20 ஈர நிலங்கள் ராம்சாா் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும். மேலும், சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

இதில், சென்னை வன வட்டத்தின் வனப் பாதுகாவலா் எஸ்.என்.தேஜஸ்வி, துணை வனப் பாதுகாவலா் (ஈர நிலங்கள்) போசாலே சச்சின், சென்னை மாவட்ட வன அலுவலா் வி.ஏ.சரவணன், எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன டீன் எம்.சக்தி கணேஷ் மற்றும் மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.