காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு (101) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

News image

நல்லகண்ணு

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு (101) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு, வயோதிகம் மற்றும் தவறி விழுந்ததில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

நுரையீரல் பிரச்னை இருப்பதால் சுவாசிக்க உதவியாக தொண்டையில் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று உணவு கொடுப்பதற்காக அவரது வயிற்றுப் பகுதியில் கேஸ்ட்ரோக்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறுகையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நலமுடன் உள்ள அவா் விரைவில் வீடு திரும்புவாா் என்றும் தெரிவித்தனா்.