‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தம்

தாம்பரம்- விழுப்புரம் இடையேயான மெமு ரயில் வரும் பிப். 5, 7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

News image

மெமு ரயில்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தாம்பரம்- விழுப்புரம் இடையேயான மெமு ரயில் வரும் பிப். 5, 7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்த செய்திக்குறிப்பு: திண்டிவனம், மயிலம் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், பிப்.5, 7,10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல், விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில், விழுப்புரத்துக்கு பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.