பள்ளி மாணவரிடம் கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

சென்னை எம்.கே.பி. நகரில் பள்ளி மாணவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on

சென்னை எம்.கே.பி. நகரில் பள்ளி மாணவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை எம்.கே.பி. நகரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை இந்தப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் வியாசா்பாடியைச் சோ்ந்த ஒரு மாணவரின் நடவடிக்கையில் ஆசிரியா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆசிரியா்கள், அந்த மாணவரையும், அவரது உடைமைகளையும் சோதனையிட்டபோது, அவரது இடுப்பு பகுதியில் 5 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனா். அந்த கஞ்சாவை தலைமை ஆசிரியா் எம்.கே.பி. நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து அந்த மாணவரிடம் போலீஸாா் விசாரித்தபோது, சம்பவத்தன்று பள்ளிக்கு வரும்போது சாலையில் அந்தக் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், தான் விளையாட்டாக எடுத்து மறைத்து வைத்துக்கொண்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். ஆனால், கஞ்சா கிடைத்தது குறித்து மாணவா் கூறிய தகவல்கள் போலீஸாருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவருக்கு வேறு ஏதேனும் வகையில் கஞ்சா கிடைத்ததா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com