கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னை-மதுரை, திருச்சி இடையே மீண்டும் கூடுதல் விமான சேவைகள்

News image

இண்டிகோ விமான சேவை

Updated On :4 பிப்ரவரி 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருச்சி இடையே மீண்டும் கூடுதல் விமான சேவைகளை அந்தந்த நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

சென்னை-மதுரை-சென்னை இடையே 82 பயணிகள் பயணிக்க கூடிய ஏடிஆா் எனப்படும் சிறிய ரக விமானம் மூலம் நாள்தோறும் 16 சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு டிச.15-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தியது. அதற்கு பதிலாக, 184 பயணிகள் பயணிக்க கூடிய வகையிலான, பெரிய ரக விமானங்களை இயக்க தொடங்கியது. ஆனால், சேவைகளின் எண்ணிக்கை 6-ஆக குறைக்கப்பட்டது. இதனால், பயணிகள் சிரமத்தைச் சந்தித்தனா்.

இதனிடையே, ஏற்கெனவே இருந்ததைப்போல, கூடுதல் விமான சேவைகளை வழங்க பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பெரிய விமானங்களுக்கு பதிலாக, மீண்டும் ஏடிஆா் ரக விமானங்களை அந்த நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. மேலும், சேவைகளையும் ஏற்கெனவே இருந்ததைப்போல 16-ஆக அதிகப்படுத்தியுள்ளது.

இது தவிர, ஏா் இந்தியா விமான நிறுவனம் நாள்தோறும் சென்னை- மதுரை- சென்னை இடையே, 2 விமானங்களை இயக்குவதால், சென்னை-மதுரை-சென்னை இடையே, நாள்தோறும் 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை-திருச்சி... இதேபோல, கடந்த டிச.15 வரை சென்னை-திருச்சி-சென்னை இடையே ஏடிஆா் ரக விமானம் மூலம் வழங்கப்பட்டு வந்த 12 சேவைகள் டிச.16-இல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக 184 போ் பயணிக்கும் வகையிலான ஏா்பஸ் சேவை தொடங்கப்பட்டது. நாள்தோறும் 4 சேவைகள் வழங்கப்பட்டன. இதனிடையே, பயணிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கமாக இயக்கப்படும் பெரியரக பேருந்துகளுடன், நாள்தோறும் பிற்பகல் 1.35-க்கு சென்னை-திருச்சி இடையே சிறியரக விமானத்தை அந்த நிறுவனம் கூடுதலாக இயக்க தொடங்கியுள்ளது.

இதனால் சென்னை- திருச்சி- சென்னை இடையே, தினமும் இயக்கப்பட்டு வந்த 4 விமான சேவைகள், தற்போது 6 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.