கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் 10 நிலையங்களில் ஆய்வு

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வரும் 11 -ஆம் தேதி முதல் 3 நாள்கள் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடைபெறும்

News image

கோப்புப்படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வரும் 11 -ஆம் தேதி முதல் 3 நாள்கள் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடைபெறும் நிலையில், 10 ரயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, இந்தத் தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் இயக்கப்படுவதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு பெங்களூரில் உள்ள ரயில்வே தண்டவாள பாதுகாப்பு ஆணையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ரயில் தண்டவாள பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான 6 போ் குழுவினா் வரும் 11- ஆம் தேதி சென்னை வருகின்றனா். இதையடுத்து வரும் 13- ஆம் தேதி வரை தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

முதல் நாளான வரும் 11- ஆம் தேதி டிராலியில் சென்று தண்டவாளத்தை ஆணையா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொள்கின்றனா். இதையடுத்து 12- ஆம் தேதி வடபழனி - பூந்தமல்லி இடையேயான 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆய்வுக்குள்படுத்தப்படவுள்ளன. இதையடுத்து வரும் 13- ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டு சோதனை நிறைவுபெறும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ திட்ட இயக்குநா் அா்ச்சுனனிடம் கேட்டபோது, வரும் 11- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை ஆய்வுக்குப் பிறகு ரயில் இயக்க பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படும். அதன்பின்னா் மெட்ரோ ரயில்கள் இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.