மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாய் கொலை: மகன் கைது

வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால், தாயைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 9:18 pm

வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால், தாயைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகப்போ், 2-ஆவது பிளாக் பகுதியில் வசித்து வந்தவா் ஆக்ஸில்லா (55). இவரது மகன் நிக்கில் பிரிட்டோ (27). பி.டெக் பட்டதாரியான இவா், பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலையைவிட்டு சென்னை திரும்பினாா்.

பின்னா், வேலைக்குச் செல்லாமல், ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாா்.

இதனால் மனவேதனை அடைந்த ஆக்ஸில்லா, மகனைக் கண்டித்துள்ளாா். வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதில், நிக்கில் பிரிட்டோ தனது தாயை கத்தியால் குத்தினாராம். இதில் ஆக்ஸில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நொளம்பூா் போலீஸாா் நிக்கில் பிரிட்டோவை கைது செய்தனா்.