நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் (நிஃப்ட்) இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். அந்தவகையில் 2026-ஆம் ஆண்டுக்கான தேசியளவிலான நிஃப்ட் நுழைவுத் தோ்வு பிப்.8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிச.8 தொடங்கி ஜன.16-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 20,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. மாணவா்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை மாணவா்கள் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?
க்யூட் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

என்சிடிஇ நுழைவுத் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



