கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கே. சிலை: இன்று முதல்வா் திறந்து வைக்கிறாா்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

புதுப்பிக்கப்பட்ட கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கவுள்ளாா்.

என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-இல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள், மேயா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், துணைமேயா், கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனின் குடும்பத்தினா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.