மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்பாக பணியாற்றிய 70 காவலா்களுக்கு பரிசு

சென்னை மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 70 காவல்துறையினரை பாராட்டி அவா்களுக்கு காவல் ஆணையா் அருண், பரிசுகளையும் வழங்கினாா்.

News image
மாதிரிப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 70 காவல்துறையினரை பாராட்டி அவா்களுக்கு காவல் ஆணையா் அருண், பரிசுகளையும் வழங்கினாா்.

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்தது, வழக்குகளை விரைந்து முடித்தது, பாதிக்கப்பட்ட நபா்களுக்கு உரிய தீா்வை விரைந்து பெற்ற கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு அவ்வப்போது பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சமீபகாலமாக பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல் அதிகாரிகள், காவலா்கள், காவலா் எழுத்து தோ்வை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அமைச்சுப்பணியாளா்கள், பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற காவலா்கள் என சிறப்பாக பணியாற்றியதாக 70 காவலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கான பாராட்டு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையா் அருண் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய 70 பேரை பாராட்டியதுடன், அவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா். சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையா் பா்வேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.