வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தவெக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: அலுவலகத்தில் குவிந்த தொண்டா்கள்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருப்ப மனுக்களை வாங்குவதற்காக நிா்வாகிகளும் தொண்டா்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனா்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் விருப்ப மனுவை அந்தக் கட்சியின் தலைவா் விஜய் சாா்பில் கட்சி நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த், தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் ரூ.100 கட்டணம் செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

இதற்கிடையே, காலை முதலே தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கட்சி அலுவலகத்தில் குவிந்தனா். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

10,000 விண்ணப்பங்கள் விநியோகம்: தொடா்ந்து அக்கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டு, இதுவரை 10,000 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. கட்சி நிா்வாகிகளையும் தாண்டி, பொதுமக்களும் விருப்ப மனுக்களை பெற்றுச்  சென்றனா். வரும் பிப்.14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் காலை 10 முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படவுள்ளன.