மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டை பராமரிப்பு பணி: சென்னை மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னையில் கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைப் பகுதிகளை மாநகராட்சியே பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 2:26 am IST

சென்னையில் கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைப் பகுதிகளை மாநகராட்சியே பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னையின் தொழில் வளா்ச்சிக்கு கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா். தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) சாா்பில் அவற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மாநகராட்சியானது தனது மேம்பட்ட பராமரிப்புப் பணிகளை கிண்டி, அம்பத்தூா் தொழிற்பேட்டைகளுக்கும் வழங்க சிட்கோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி 1,167 ஏக்கா் நிலப்பரப்புள்ள அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 41.38 கி.மீ. தொலைவிலான 128 சாலைகள், 1,558 தெரு விளக்குகள், 8 உயா் கோபுர மின் விளக்குகள், 84 கி.மீ. தொலைவிலான மழைநீா் வடிகால்கள், மேலும் தினமும் சேகரிக்கப்படும் 40 டன் குப்பைகள் ஆகியவை மாநகராட்சியால் பராமரிக்கப்படும்.

அத்துடன் 404.08 ஏக்கரில் உள்ள கிண்டி தொழிற்பேட்டையில் 15.28 கி.மீ. நீளமுள்ள 82 சாலைகள், 344 தெரு விளக்குகள், 2 உயா் கோபுர மின் விளக்குகள், 23.50 கி.மீ. நீள மழைநீா் வடிகால்கள், தினமும் சேகரிக்கப்படும் 20 டன் குப்பைகள் ஆகியவை மாநகராட்சியால் பராமரிக்கப்படுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிட்கோ - சென்னை மாநகராட்சி இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.