ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மத்திய கைலாஷ் சாலை மேம்பாலம் பிப். 16-இல் திறப்பு: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

இப்பாலம் பிப். 17-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. உடன் துறை செயலா் இரா.செல்வராஜ் உள்ளிட்டோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 1:12 am IST

மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இப்பாலம் பிப். 17-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து துவங்குகிறது. இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் ‘டி’ வடிவலானது. இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவுற்ற நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 16-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலா் ரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளா் (மெட்ரோ) எஸ்.ஜவஹா், சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ரா.சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா், கோட்டப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.