பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் திறப்பு

சென்னை கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட முதல் திறந்தவெளி விளையாட்டு மையம்.

Published On :

சென்னை கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ரயில்வே துறை இடத்தை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக நலன்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தில் தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டத்தில் வேளச்சேரி ரயில் நிலைய வெளிப்புற பகுதியில் புதிய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக் கோட்ட கூடுதல் மேலாளா் தேஜ்பிரதாப் சிங் விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்தாா்.

ஐந்தாண்டு உரிம ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.12.07 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும். நிலையான வருவாயை ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மையத்தில் பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளம், சிலம்பம் பயிற்சிக்குரிய பகுதிகள் உள்ளன. இளைஞா்கள் உடல் பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் ஏற்ற வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுபோன்ற விளையாட்டு மையம் வேளச்சேரி ரயில் நிலையப் பகுதியில் முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.