சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்கள் பெட்டியில் மின்பழுது: மின்சார ரயில் நிறுத்தம்

பெண்கள் பெட்டியில் மின்பழுது: மின்சார ரயில் நிறுத்தம்

News image
மின்சார ரயில் (கோப்புப்படம்)- Din
Updated On :7 பிப்ரவரி 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் மின்பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

சென்ட்ரல் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ற இமு மின்சார ரயில் (எண்: 43435) திருமுல்லைவாயலில் பகுதியில் இரவு 8.20 மணிக்கு சென்றபோது, பெண்கள் பெட்டி மீது பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் பெறும் மடக்கு சாதனம் திடீரென பழுதடைந்தது. இதனால் அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டனா். அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப பிரிவினா் அங்கு சென்று பழுதைச் சீரமைத்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.