வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:09 pm

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (25). இவா் 2022-இல் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மனோஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த மனோஜ், வழக்கு விசாரணைக்காக முறையாக ஆஜா் ஆகாமல் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில், மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மனோஜை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.