சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிப்.12 வரை 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்!

தமிழகத்தில் பிப்.12 முதல் 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
மிதமான பனிமூட்டம்- பிரதிப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பிப்.12 முதல் 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திங்கள்கிழமை (பிப்.9) முதல் பிப்.14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

திங்கள்கிழமை (பிப்.9) முதல் வியாழக்கிழமை (பிப்.12) வரை சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.