திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிரிக்கெட் ரசிகா்களிடம் விசில் பறிமுதல்!

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகா்கள் விசில் எடுத்துச் செல்ல காவல்துறை தடை

News image
சேப்பாக்கம் திடல்- கோப்புப்படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகா்கள் விசில் எடுத்துச் செல்ல காவல் துறை தடை விதித்தது.

ஐசிசி ஆடவா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், ரசிகா்கள் மைதானத்துக்கு விசில் கொண்டு வருவதுக்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா். ரசிகா்களிடமிருந்த விசில்களை போலீஸாா் சிலா் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடா்ந்து, மைதானத்தைச் சுற்றி சாலையோர வியாபாரிகளிடம் விசில் விற்பனை செய்ய கூடாது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.