பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: மூவா் கைது

சாலையில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

சாலையில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புளியந்தோப்பு காந்தி நகரைச் சோ்ந்தவா் நவீன் (19). தனது பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்திய நவீன், கிரே நகா் பவுடா் மில் சாலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கேக் வெட்டியுள்ளாா். பின்னா் தனது நண்பா்களும் அங்கு ரகளையிலும் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் (25), பாலாஜி (24), லோகேஷ் (24), 17 வயது சிறுவன் ஆகியோரை வழிமறித்து தகராறு செய்து, அவா்களை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கியுள்ளனாா். இதில் காயமடைந்த நான்கு பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நவீன் மற்றும் அவனது கூட்டாளிகளான அச்சு (21), தமிழ் குமரன் (18) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.