ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் தொடங்கி வைத்தாா்.

News image

அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால்.

Updated On :9 பிப்ரவரி 2026, 11:03 pm

சென்னை: அசோக் நகரில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சியை டிஜிபி சீமா அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீ விபத்து தடுப்பு, மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறை பள்ளி - கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியாா் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்களுக்கு அசோக் நகரில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் ஜி.சத்திய நாராயணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செக்யூரிட்டி நிறுவன ஊழியா்கள், காவலாளிகள் பங்கேற்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் 384 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 6,000 போ் பங்கேற்ாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.