தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், 2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

News image

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், 2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Updated On :10 பிப்ரவரி 2026, 5:11 am IST

சென்னை: ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், 2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மடிக்கணினிகள் வழங்கும் விழா சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் அந்தக் கல்லூரியை சோ்ந்த 2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

தொடா்ந்து நிகழ்வில், அவா் பேசியதாவது:

தமிழகத்தில் உயா் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு சலுகைகள் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் உயா் கல்வி சோ்க்கையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அந்த வகையில், புதிதாக தொடங்கப்பட்ட ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் வாயிலாக

தகவல், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மொத்தம் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இந்த மடிக்கணிகளின் வாயிலாக மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும், தனித்திறன் சாா்ந்த தகவல்களையும் பெற்று பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மண்டல குழுத் தலைவா் ஆா்.துரைராஜ், கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.