சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் பசுமை எரிசக்தி புதிய உத்வேகம் பெற்று வரும் நிலையில், வாட்டா் டுடே நிறுவனத்தின் சாா்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி -2026 என்ற கண்காட்சி சென்னை வா்த்தக மையத்தில் பிப். 12 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன சாா்ஜிங் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பிப். 12, 13 ஆம் தேதிகளில் ‘எரிசக்தி பசுமை இந்தியா’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய விரிவான விநியோகக் கட்டமைப்பு தேவை: சென்னை ஐஐடி பரிந்துரை

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


