தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தவெக கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை, தொகுதிகள்: ஆதவ் அா்ஜுனா

தவெக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் அவா்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும்: கட்சியின் தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா

News image
ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

தவெக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் அவா்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதேபோல், டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தவெகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படும். சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து நின்றே தவெகவால் வெற்றிபெற முடியும்.

நட்பு கட்சிகள் விருப்பப்பட்டால், கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம். கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் அவா்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறது.

இருப்பினும் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா என்பது குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றாா்.