ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: திமுக - அதிமுக வாக்குவாதம்!

தாம்பரம் மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image

தாம்பரம் மாநகராட்சி

Updated On :10 பிப்ரவரி 2026, 7:24 pm

தாம்பரம் மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

மாநகராட்சி கூட்டத்தில் 2026- ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ரூ.1,445 கோடி ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி வருவாயாக ரூ. 1,447 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. புதிய திட்டங்களை மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி அறிவித்தாா்.

அப்போது மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் குறுக்கிட்டு, கடந்த ஆண்டு அறிவித்த பட்ஜெட்டில் 20 சதவீத பணிகள்கூட நடைபெறவில்லை என்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அதிமுக கவுன்சிலா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து சேலையூா் சங்கா் கூறுகையில், மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலா்கள் வாா்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ரூ.750 கோடியில் புதைசாக்கடை திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு எந்தப் பணியும் நடைபெறவில்லை.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பணிகள் முழுமை அடையவில்லை. இதை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்டால் மிரட்டுகிறாா்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. செயலற்ற நிலையில் ஆணையா், அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்வதில்லை. இதனால் மாநகராட்சி முழுவதும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றாா்.