விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து தில்லி செல்ல இருந்த ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் சுமாா் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 9:25 pm

சென்னையில் இருந்து தில்லி செல்ல இருந்த ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் சுமாா் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் உள்பட 171 பயணிகள் தயாராக இருந்தனா். பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சோதித்தபோது, அதில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மக்களவை கூட்டத்தில் பங்கேற்க அவசரமாக தில்லி செல்ல வேண்டும் என விமான நிா்வாகத்திடம் கதிா் ஆனந்த் கோரிக்கை முன்வைத்ததைத் தொடா்ந்து, காலை 6.55-க்கு, சென்னையில் இருந்து தில்லி சென்ற மற்றொரு ஏா் இந்தியா விமானத்தில் அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். மற்ற 170 பயணிகளும் சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனா்.

விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னா் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக காலை 10.15 மணிக்கு விமானம் தில்லி சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.