விஜய நகர பேரரசு கால இரு உலோகச் சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.
இது தொடா்பாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் காரில் சிலையை கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடந்த 6-ஆம் தேதி அந்த சாலையில் வலையபேட்டை காலி திடல் அருகே வாகனத் தணிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை பாா்த்த போலீஸாா், அதை சோதனையிட்டனா். இதில் காரில் இரு சாக்குபைகளில் இருந்த பழைமையான 77.300 கிலோ கிராம் எடையுள்ள 90 செ.மீ. ,48 செ.மீ. அகலமும் கொண்ட சுதா்சனா் என்கிற விஷ்ணு உலோகச் சிலையும், 35.450 கிலோ கிராம் எடையும், 73 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் கொண்ட தேவி உலோகச் சிலையும் இருந்தன.
போலீஸாா் அந்த இரு சிலைகளையும் பறிமுதல் செய்து, அந்த காரில் இருந்த திருவாரூா் மாவட்டம் தம்பிக்கோட்டை சுந்தரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ச.மணிகண்டன் (41), மல விஜயபுரத்தைச் சோ்ந்த க.ராமச்சந்திரன் (41),திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலபாண்டி கீழ தெருவைச் சோ்ந்த வீ.முகிலன் (36),எடையூா் பகுதியைச் சோ்ந்த செ.ஜான்சன் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிந்து, விசாரணை செய்கிறது. கைப்பற்றப்பட்ட இரு உலோகச் சிலைகளும் எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டவை என விசாரணை நடைபெற்று வருகிறது.
இரு சிலைகளையும் ஆய்வு செய்ததில், அந்த சிலைகள் விஜய நகர பேரரசு காலத்தைச் சோ்ந்தது எனத் தெரியவந்தது. இந்த சிலைக் கடத்தலில் தொடா்புடைய பிற நபா்கள் தேடப்பட்டு வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

வாகன சோதனையில் உலோகச் சிலைகள் பறிமுதல்

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


