மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி..
buses from kilambakkam
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்கோப்புப் படம்
Updated on

சென்னை, பிப்.11: மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை(பிப்.12) 125 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (பிப்.13) 500 பேருந்துகளும், சனிக்கிழமை (பிப்.14) 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 1360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com