காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பிப்.15- ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் பிப்.15-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :13 பிப்ரவரி 2026, 2:59 am IST

தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் பிப்.15-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பிப்.15-ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

மேலும், தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வெள்ளிக்கிழமை (பிப்.13) தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், சனிக்கிழமை (பிப்.14) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஞாயிறு, திங்கள்கிழமை (பிப்.15, 16) ஆகிய நாள்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப்.17, 18 ஆகிய நாள்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டம்: ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் பிப்.16 வரை அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.